தடுப்பதற்காக ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தைப் போலவே, தமிழ் நாட்டிலும் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், “ஆந்திராவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும், பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கை இது என்பதில் யாருக்கும் ஐயமும் இருக்க முடியாது.
எனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கும் கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.