இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கூறினார்.
இருப்பினும் இந்த பிரச்சினை நீண்டகாலம் செல்லாது என்றும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் கூறிய அவர், ஜனவரி மாதமளவில் கட்சிக்குள் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வலுவான அணியாக கட்சி மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கட்சியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க முன்மொழியப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.