பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் நேற்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் கந்தையா கலைவாணி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் கந்தையா கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டு இவற்றினை வழங்கி வைத்தனர்.