நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டமாக எதிர்வரும் 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் ஊரக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி மற்றும் மாநராட்சிகளுக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விபரங்களை தமிழக அரசு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, கடலூர் நகராட்சி பழங்குடி இன பெண்களுக்காகவும் ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 9 நகராட்சிகள் பட்டியல் இன பெண்களுக்காகவும் மற்றும் நெல்லிக்குப்பம், அரக்கோணம், மறைமலைநகர் உள்ளிட்ட 8 நகராட்சிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.