உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை 27 மற்றும் ரெக்ஸ்டேல் பூலிவார்ட்க்கு அருகிலுள்ள டிரிபிள் கிரவுன் அவென்யூ மற்றும் மேர் கிரசண்ட் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டிலேயே நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்குப் பிறகு, இந்த தீவிபத்து ஏற்பட்டது.
இதன்போது, சம்பவமறிந்து வந்த தீயணைப்பு படையினர், கடுமையாகப் போராடி தீயினைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், இச்சம்பவத்தின்போது துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிந்து விட்டதாகவும், தீயணைப்புப் படை வீரரொருவர் கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளானதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தின் போது 10 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தீவிபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.