மேற்பட்ட இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை சித்தராமையா இராஜிநாமா செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 சட்டசபை தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் ஏனைய 15 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதற்கிடையே, இன்று காலை 8 மணி முதல் 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதன்போது ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க.வினர் முன்னிலை பெற்று வந்தனர். காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தல் தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா இராஜினாமா செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று சட்டசபை குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன்.
எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.