மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை ஏகமனதாக தீர்மாணித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க பரிந்துரைத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) அரசியலமைப்பு சபை கூடியது.
இதன்போதே எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வு பெற்றதன் பின்னர் அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.