(திசை வீரசிங்கம்) செபமாலை லிங்கேஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார்.
இவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் பல வருடமாக இணைந்து செயற்பட்டு கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சேவையாற்றி வந்தார்.
மன்னார் மாவட்ட இணைப்பாளர் செபமாலை லிங்கேஷ் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வவுனியா பொது வைத்தியசாலையில் அவர் மரணமடைந்தார்.