சாரதிகளுக்காக, புதிய சட்டமொன்று அமுலுக்கு வரவுள்ளது.
மின்சாரக் கார்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில், பெட்ரோலியத்தால் இயங்கும் வாகனங்களை நிறுத்தும் ஒன்ராறியோ வாகனச் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமே இதுவாகும்.
இவ்வாறு செயற்படும் வாகனச் சாரதிகளுக்கு 125 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சார்ஜிங் நிலையத்தில் நிறுத்தும் ஆனால் அதைப் பயன்படுத்தாத மின்சார வாகனங்களின் வாகனச் சாரதிகளுக்கும் இதே அபராதம் பொருந்தும்.
நியமிக்கப்பட்ட இடங்களில் உள்ள வாகனங்கள் மின்சார வாகனமாக இருக்கவேண்டும் மற்றும் நிலையத்தின் சார்ஜிங் கருவிகளுடன் இணைக்கப்படவேண்டும், அல்லது ரிக்கெற் பெறலாம். இவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்திற்கான இந்த மாற்றம், ஒன்ராறியோவில் ஒரு பசுமைக் கட்சியின் தனியார் உறுப்பினரால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.