கிளிநொச்சியில் விசேட தேவையுடையோர் தினம் நினைவுகூறப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஒட்டுசுட்டான் சிவன் கோயில் வளாகத்தில் ஔிரும் வாழ்வு அமைப்பின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள விசேட தேவையுடை சிறுவர்கள், துணுக்காய், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள விசேட தேவையுடை நபர்களுடன் பணியாற்றும் ஆர்வலர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட Child Fund நிறுவனத்தின் செயற்றிட்ட முகாமையாளர் சுதர்சன், விசேட தேவையுடைய நபர்களது பங்களிப்பினையும் அவர்களது தலைமைத்துவத்தினையும் ஊக்கப்படுத்துவதுடன், 2030ஆம் வருடத்திற்கான அபிவிருத்தி இலக்குகளுக்காக நடவடிக்கை எடுப்பதற்கு நெறிப்படுத்துவதும் என்ற தொனிப் பொருளின் கீழ் இன்றைய நிகழ்வானது ஒட்டுசுட்டான் பிரதேச ஔிரும் வாழ்வு நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.