குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், விவாதமும், பேச்சுவார்த்தையும் ஜனநாயகத்தின் அங்கம், ஆனால் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பண்பாடு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தம் இந்தியர்கள் யாரையும் பாதிக்காது என தெரிவித்துள்ள மோடி, பல ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாதவர்களின் நலனுக்காகவே சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுபான்மை மக்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக உழைக்க வேண்டிய நேரம் இது என்றும், நம் ஒற்றுமைககும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் குழுக்களை நாம் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டம் கவலையளிப்பதாகவும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டமூலம் நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர் சமுதாயமும் பெரும் பங்கு வகித்துள்ளது.
அந்தவகையில் டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதன்போது மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.