எல்லை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதியில் சில அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானதும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் லால் குயிலாவில் இருந்து சாஹித் பகத் சிங் பூங்கா வரை பேரணி செல்வதற்காக நூற்றுக்கணக்கானோர், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அண்டை மாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் குவிந்து வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டெல்லியின் எல்லை பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.