கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.
நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது.
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களின் புகைப்படங்களை நாசா நேற்று வெளியிட்டது.
இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோவின் தலைவர் சிவன், ‘இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது.
இது குறித்து எங்கள் இணையப்பக்கத்தில் ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். வேண்டுமென்றால் நீங்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்