கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர்.
25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?” என பொரிஸ் ஜோன்சன் கேள்வியெழுப்பினார். இதற்கு மக்ரோன் தலையசைத்தார்.
ட்ரூடோ பதிலளித்தபடி, “அவர் தாமதமாகிவிட்டார், ஏனெனில் அவர் ஒரு … 40 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்” என கூறினார்.
ஆனால் வீடியோவில் எந்த நேரத்திலும் தலைவர்கள் ட்ரம்பை பெயரால் குறிப்பிடவில்லை, இருப்பினும் ட்ரூடோவின் கருத்து கடந்த சந்திப்பின்போது பத்திரிகைகளுக்கு ட்ரம்பின் நீண்ட கருத்துக்களைக் குறிப்பிடுவதாக அமைந்தது.
மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு வெளிப்படையாகவும் சத்தமாகவும் பேசிக் கொண்டிருந்தாலும், உரையாடல் பதிவு செய்யப்படுவதை எந்த தலைவர்களும் அறிந்ததாகத் தெரியவில்லை.
.@JustinTrudeau, @EmmanuelMacron, @BorisJohnson and other VIPs shared a few words at a Buckingham Palace reception Tuesday. No one mentions @realDonaldTrump by name, but they seem to be discussing his lengthy impromptu press conferences from earlier in the day. (Video: Host Pool) pic.twitter.com/dVgj48rpOP— Power & Politics (@PnPCBC) December 3, 2019