மாணவி தொடர்பாக, தகவலறித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவி, கடந்த வியாழக்கிழமை காலை 131 அவென்யூ மற்றும் 91 தெரு உள்ள கில்லர்னி பாடசாலை வளாகத்தில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எட்மன்டன் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், EPS செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதாவது, குறித்த 14 வயது சிறுமி 5’5 அங்குலம் உயரமும், 145 கிலோ எடையும் கொண்டவர் ஆவார்.
இந்நிலையில், குறித்த சிறுமி தொடர்பாக தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 அல்லது எட்மன்டன் குற்றத்தடுப்புப் பிரிவு 1-800-222-8477 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த இணையத்தள முகவரியிலும் www.p3tips.com/250.பொது மக்கள் தெரிவிக்கலாம் எனத் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.