ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஈ.பி.டி.பி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்த போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட அமர்வு தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த அமர்வில் சபையின் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.
அப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னையின் பெண் உறுப்பினரான திருமதி வாசுகி குறுகிய நேரத்தில் திருத்தியமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தரப்பட்டுள்ளமையினால் தன்னால் வாசித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை என்ற புரளியை சபையில் தொடக்கினார்.
இதனை தொடர்ந்து சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்தில் பல குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இருப்பினும் பின்னர் தவிசாளரினால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஈ.பி.டி.பியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டாக இணைந்து எதிர்த்தன.
இதேவேளை நல்லூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றபோது சபை உறுப்பினர்களில் இரு வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.