ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் உள்ளே போகவேண்டி வரும் என அவர் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாங்காட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் கடைசி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான செயலை சில அதிகாரிகள் செய்துள்ளனர்.
என்னுடைய பல தவறுகளையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதனை நான் வரவேற்றுள்ளேன். ஊடகவியலாளர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது அதனை நாம் திருத்திக் கொள்ளலாம்.
அதைவிட ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் தேவையானது. ஏனென்றால் பல அதிகாரிகளின் ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு அவர்களே தேவை.
எனவே ஊடகவியலாளர்களைத் தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இதைவிட ஊடகவியலாளர்களுக்கு எதிராக தன்னிச்சையாகச் செயற்பட்டார்கள் என்றால் பல அதிகாரிகள் உள்ளே செல்லவேண்டி வரும்.
ஏனென்றால் அதிகாரிகள் மீது அவ்வளவு பெரிய பிரச்சினைகள் உண்டு. எனவே ஊடகவியலாளர்களைத் தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.