நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள், கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
ரஞ்சித் டி சொய்சா (வயது 57) சிங்கப்பூரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இறக்குவாணை பிரதேச சபையின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் 1997 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.
ரஞ்சித் டி சொய்சா கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.