தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் புளத்சிங்கள, வலல்லவிட்ட, மத்துகம மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட, இமதுவ மற்றும் பத்தேகம ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.