குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், சுமார் 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கவிஞர் வைரமுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் ‘மண்ணிழந்த மனிதர்கள்’ என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா…?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்டத்திருத்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.