வெளிநாடுக்குச் தப்பிச் சென்றுள்ள நித்தியானந்தாவின் காலில் விழுந்து வணங்கும் முக்கியஸ்தர் யார்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
‘சுவாமி நித்தியானந்தா நாட்டை விட்டு புறப்பட முடிவெடுத்தபோது, அமித்ஷா அவரை பிடித்து கொண்டு விட மறுத்த தருணம்’ என இணையத்தில் ஒருவர் பதிவேற்றிய குறித்த ஒளிப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் இந்த ஒளிப்படம் குறித்த உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஒளிப்படத்தில் நித்தியானந்தா காலில் விழுபவர் முகம் மறைந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஒளிப்படத்தில் நித்தியானந்தாவும் விழுந்து வணங்குபவரின் வழுக்கைத் தலையும்தான் தெளிவாகத் தெரிகிறது.
இந்த படத்தைப் பதிவிட்டவர், அமித் ஷா எனப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்தவர்கள் ஒளிப்படத்தில் இருப்பது அமித் ஷா என்ற நம்பிக்கையில் பகிரத் தொடங்கினர். இந்த விவகாரம் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கண்களில்பட ஆங்கில நாளிதழ்கள் தொடங்கி பல்வேறு செய்தி நிறுவனங்கள் விசாரணையை தொடங்கியது.
தேடுதலில், அந்த ஒளிப்படத்தில் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லை என்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒளிப்படத்தில் நித்தியானந்தா காலில் விழுந்தவர் மொரிசியஸ் நாட்டின் இந்திய உயர் ஆணையர் கோபுர்துன் என்பது தெரியவந்தது.
இந்த ஒளிப்படம் தமிழ் முகநூல் வாசிகள் மத்தியிலே அதிகளவில் பகிரப்பட்டுள்ளது தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒளிப்படம் பெங்ளூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், நித்தியானந்தா மொரிசியஸ் அரசுடன் 2 ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளார் என்பது அதிரடி தகவலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தரவுகளின்படி, நித்தியானந்தா மொரிசியஸ் நாட்டில் பாடசாலை, பல்கலைகழங்கள் திறக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். இதனால்தான் அந்த வைரல் ஒளிப்படத்தில் மொரிசியஸ் நாட்டின் தேசியக் கொடியும் இருந்துள்ளது.