தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, பொலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 3 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதுடன் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து ருவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அவர் “சர்வாதிகாரதத்தின் மூலம் மாணவர்களின் துணிச்சலையும், குரலையும் மோடி அரசு அடக்க முயன்றால் விரைவில் இளைஞர்களின் குரலைக் கேட்க வேண்டியதாக இருக்கும்.
மேலும் பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய நேரத்தில் வட.கிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும் அடக்கி ஒடுக்குகிறது இந்த கோழைத்தனமான அரசு”என ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்