உணவக உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆடியபாதம் வீதி ரயில் கடவைக்கு அருகில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் மீதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொக்குவில் சந்திப் பகுதியில் இருந்து உணவகத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த அவரை, மேட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த குறித்த நபர் முச்சக்கர வண்டியைவிட்டு இறங்கி தப்பித்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அவருடைய முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய கும்பல், முச்சக்கர வண்டியை வீதிக்கு அருகில் இருந்த வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.