ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்மாரி படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் 13ம் திகதி இப்படம் வெளியாகிறது.