பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
டவுன்ரவுன் ஈஸ்ற்சைற் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 5:30 மணியளவில், இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இதன்போது, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போது, ஒருவர் உயிராபத்தான நிலையில் தென்பட்டதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்தில் பல மணி நேரம் பொலிஸார், மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்ததாக கூறப்படுகின்றது.
எனினும், இந்தத் துப்பாக்கிச்சூடு எதற்காக நடத்தப்பட்டது? யாரால் நடத்தப்பட்டது? காயமடைந்தவரின் விபரம் என எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்