குறைவடைந்துள்ள நிலையில் மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மண்முனை- தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில்,வெள்ள நீர் வழிந்தோடும் நிலையில் நுளம்பு பெருக்கெடுக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடனும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையுடனும் இணைந்து பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினரால் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வீடுகளில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டதுடன் வீதிகளில் வெள்ளம் காரணமாக தேங்கியிந்த கழிவுகளும் அகற்றப்பட்டன.
இந்த நுளம்பு ஒழிப்பு சிரமதான பணியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் வே.வேணிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.