பேச்சாளரான கேற் பார்சாஸ் தனது பதவியை விட்டு விலகுவதாகவும், மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சட்யா நரெல்லாவுக்காக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேற் பார்சாஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஆளும் லிபரல் கட்சியினர் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழந்தனர்.
இந்தநிலையில், பிரதமர் ட்ரூடோவின் அலுகவலகத்தை விட்டு வெளியேறிய மூத்த அதிகாரிகளின் வரிசையில் அண்மைய வௌியேற்றமாக கேற் பார்சாஸில் பதவி விலகல் அமைந்துள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள கேற், தகவல்தொடர்புகள் மற்றும் ஏனைய வழிகளின் மூலம் வொஷிங்ரனைத் தளமாகக் கொண்ட மைக்ரோசொஃப்ற் நிறுவனமான ரெட்மண்டை வலுப்படுத்துவதற்காக நரெல்லாவின் அலுவலகத்தில் மூத்த இயக்குநராக பணியாற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, மேலும் விவரங்களை அவர் வௌியிடவில்லை.