இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் வீரமரணடைந்துள்ளனர்.
ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியிலுள்ள இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று (திங்கட்கிழமை) துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் பீரங்கி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டதிற்குட்பட்ட குரிஷ் எல்லைக்கோடு பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால் எல்லையில் பதட்டமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.