வரும் பலர் சிறையில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றும் கால்நடை மருத்துவர் விவகாரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டவரின் மனைவியான ரேணுகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதுவரை தனது கணவரின் உடலை புதைக்கமாட்டோம் என்றும் தன்னையும் சுட்டு கொன்றுவிடுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பின் எரித்து கொல்லப்படார்.
இந்த விவகாரம் குறித்து நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள என்கவுண்டரில் கொல்லப்பட ஒருவரின் மனைவி ரேணுகா மேற்படி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ஏனையவர்களின் உறவினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் என்கவுண்டர் செய்யப்பட்டது பிழையே எனவும், நீதிமன்றத்தின் ஊடாகவே அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சில அரசியல் தலைவர்கள் உட்பட மனித உரிமை அணையமும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மனித உரிமை ஆணையம் நேற்றைய தினம் தனது விசாரணைகளை முன்னெடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.