முகமது இயக்கம் சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான சஜத் அகமது கான், தன்வீர் அகமது, பிலால் அகமது, முசாபர் அகமது ஆகிய நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் டெல்லி என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிலேயே சஜத் கான், கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டான். அப்போது நாடாளுமன்ற வளாகம், டெல்லி தலைமைச் செயலகம், சிவில் லைன்ஸ், பட் காலனி, காஷ்மீரி கேட், லோதி எஸ்டேட், மண்டி ஹவுஸ், தரியா கஞ்ச், காசியாபாத் போன்ற இடங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்டு சுற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.