
அமித்ஷாவும் துரியோதன், சகுனியை போன்றவர்கள் என நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், மாணவ, மாணவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டணங்களையும் பதிவு செய்துள்ளார்.
அப்போது மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் துரியோதனனும் சகுனியும் போன்றவர்கள் என விமர்சித்துள்ளார்
