LATEST NEWS

Canada (Toronto)

Toronto booked.net
-1°C


















Saturday, December 7, 2019

பேருந்தில் தவறாக நடந்துக்கொண்ட பயணி: தடுக்க சென்ற அதிகாரி மீது தாக்குதல்!

வன்கூவரில் டிரான்ஸ்லிங்க் பேருந்தில் தவறாக
நடந்துக்கொண்ட பயணியொருவரை, பொலிஸார் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பேருந்தில், ஒரு பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு உறுப்பினர்கள் பேருந்திற்க்கு அழைக்கப்பட்டனர்.

இதன்போது தவறாக நடந்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பயணியை, அதிகாரியொருவர் அணுகிய போது அவர் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்தியதாகவும், அதிகாரியின் தடியை எடுக்க முயன்றதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தவறாக நடந்துக்கொண்ட பயணியை, பொலிஸ் காவலில் வைத்துள்ளதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7