எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும் சட்டத்தை ஏமாற்றிய நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையே இது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் அடக்குமுறைகளை கையாண்ட நபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்தால் அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்