இளைஞரை மூன்று பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெயர் குறிப்பிடப்படாத குறித்த இளைஞன் ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் என்றும் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதம் தொடர்பான விடயங்களை இணையத்தில் பதிவிட்டதாகவும் இரண்டு இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் இணைப்பதற்காக முயற்சித்ததாகவும் இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை அவுஸ்ரேலியாவின் ரிவர்வூட் (Riverwood) நகரில் உள்ள வீடொன்றில் இளைஞன் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தாக்குதலுக்குத் திட்டமிடும் நோக்கில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் குறித்த ஆவணத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், தனது தீவிரவாத கருத்துக்களை கவனத்தில்கொள்ளும் இளைஞர்களை தன்பக்கம் அழைப்பதற்கு முயன்றதாகவும் அவுஸ்ரேலிய பெடெரல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆறு மாதங்கள் புலன் விசாரணையின் அடிப்படையிலேயே இந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.