பிரிவுக்குட்பட்ட கிரான் சந்தனமடு ஆறு பகுதியில், மக்கள் மற்றும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர். பாதை மோசமாக பாதிக்கப்படுத்தல், ஆறு அகலமாக்கப்படுத்தல், வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர்கொள்ளுதல், உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப்பயன்படுத்த முடியாமை உள்ளிட்ட பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர் .
மேலும் இந்த பகுதியில் மண் அகழ்விற்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் தடை விதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழையுடனான காலநிலையினை தொடர்ந்து இந்த சட்டவிரோத மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.