எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமிலினால் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரிய முறையில் அரசுடமை ஆக்கப்படாத நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனைக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போதும் அதனை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததாக மொஹமட் முஸமில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.