ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து இன்று (வியாழக்கிழமை) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ” நான் ஓய்வு பெறுவதைப் பற்றி யோசித்து வருகின்றேன்.
ஆனால் நான் விலகக்கூடாது என்று கட்சியின் சக உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்” என கூறினார்.
இதேவேளை தனது அரசியல் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.