இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனை தாங்கள் கடந்த பல வருடங்களாகச் சொல்லிவந்த போதும், தமிழ் தரப்புக்களே இது நடைமுறைச் சாத்தியமற்றது என தங்களை கேலி செய்ததாகவும் ஆகால் அன்று சொன்ன இந்த விடயங்கள் இன்று யதார்த்தமாகி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜப்பான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் உரையாடிய விடயங்களில் மிக முக்கியமான விடயங்கள் ஊடகங்களில் வெளி வந்திருக்கின்றன.
அதாவது சீனாவின் ஹொங்கொங்கைப் போல ஒரு நாடு இருதேசங்கள் என்ற கோட்பாட்டை இலங்கையிலும் உருவாக்குவதற்கு வல்லரசு நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்ற ஹொங்கொங் பிராந்தியத்திலே குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தச் சந்தர்ப்பத்திலே தான் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோது அவ்வாறாக இரு தேசங்கள் ஒரு நாடு என“பதை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
ஆகவே ஜனாதிபதியின் இந்தக் கருத்து எதை வெளிப்படுத்துகிறதென்றால், இலங்கைத் தீவை மையப்படுத்தி வல்லரசு நாடுகளுக்கிடையே ஒரு இராஜதந்திரப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அந்தப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதென்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்தப் போட்டிச் சூழலிலே இலங்கைத் தீவை தங்களுடைய ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள விரும்புகின்ற இந்த வல்லரசுகளின் ஒரு பகுதியினர் அதாவது இலங்கை ஆட்சியாளர்கள் தற்போது நடந்து கொள்கின்ற விதத்தை விரும்பாத சர்வதேச வல்லரசுகள் இலங்கையில் தமிழர்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்கக் கூடிய சூழல் அதிகரித்து வருவதை ஜனாதிபதியினுடைய இந்த உரையாடல் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.
ஏனென்றால் இலங்கையின் ஆட்சியாளர்களின் தற்போதைய போக்கு என்பது இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்ற ஒரு சாராருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றதென்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
அவ்வாறான ஒரு சூழலிலே இந்தத் தீவை கையாள்வதற்காக இலங்கையில் இருக்கக் கூடிய வடக்கு கிழக்கு பிராந்தியத்தை தாயகமாகக் கொண்டு வாழ்கின்ற தமிழர்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள். ஆகவே அந்த தேசத்தை அங்கீகரத்து விடக்கூடியதாக நிலைமை நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தான் காட்டுகின்றது.
கடந்த பத்து வருடங்களாக இலங்கைத் தீவை மையப்படுத்தி இந்தப் பூகோளப் போட்டி நடைபெறுகிறது. எனவே தேசம் அங்கீகரிக்கக் கூடிய நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை எங்களுடைய மக்கள் புரிந்துகொண்டு எதிர்காலத் தீர்மானங்களை எடுக்கவேண்டும் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்