அமைக்கும் தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய 8 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மறவன்புலவு கிராமத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறிப்பிட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
இது குறித்து வி.மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “மறவன்புலவு பகுதியில் 4 காற்றாலைகள் அமைக்கப்படுகின்றது. அவற்றில் இரு காற்றாலைகள் அமைப்பதில் மக்களுக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை.
எனினும் இரு காற்றாலைகள் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்படுகின்றன. அதனை மக்கள் எதிர்க்கிறார்கள். இதனை நேரில் வந்து பார்க்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைய மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன்.
அடுத்தகட்டமாக இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்காக காற்றாலை அமைக்கும் நிறுவனத்துடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த நடவடிக்கையை கட்சி ரீதியியாக மேற்கொண்டு, மக்களின் குடியிருப்புக்குள் அமைக்கப்படும் இரு காற்றாலைகளை மாற்றிடம் ஒன்றில் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வோம்” என்றார்.
இதன்போது யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனும் சென்றிருந்தார்.