முடியும் என மக்கள் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மோடி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். காடுகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்து பழகிய பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்கு வந்து நாடு ஆண்டார்.
ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சி செய்தபோது முதலமைச்சரின் நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தன.
பா.ஜ.க.வின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது பா.ஜ.க. மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்