பிரச்சினைகளில் முடிவெடுக்காமல் இருந்தனர் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலுக்காக முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. வாக்கு வங்கி அரசியலைப் பற்றி கவலைப்படவில்லை. எப்போதும் மக்களின் நலனுக்காகவே நடவடிக்கை எடுக்கிறது.
இராமஜென்ம பூமி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்தது. நாட்டின் நலன் என்பது அந்த கட்சிக்கு இரண்டாம் பட்சம் தான்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அந்த மாநில மக்கள் விரும்பினர். பல ஆண்டுகளாக அந்த கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
இதேவேளை, நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று வருகிறோம்’’ எனக் கூறினார்.