தளத்தில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர் சென்ற வாரம், வேறொரு துப்பாக்கிச் சூடு பற்றிய காணொளியை நண்பர்களுக்கு காண்பித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஃபுளோரிடா கடற்படைத்தளத்தில் முகமது அல்ஷம்ரானி என்ற சவுதி அரேபிய மாணவர் கைத்துப்பாக்கியால் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் எட்டுப் பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அமெரிக்க இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதன்போது, சென்ற வாரம், வேறொரு துப்பாக்கிச் சூடு பற்றிய காணொளியை முகமது அல்ஷம்ரானி மற்றவர்களிடம் போட்டுக் காட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர், சமூக வலைத் தளங்களில் அவர், அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகளையும், ஒசாமா பின்லேடனின் கருத்தையும் பதிவு செய்திருப்பதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இருந்த போதிலும், தற்போதுள்ள சூழலில் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை, பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்த முடியாது என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mark Esper) தெரிவித்துள்ளார்.