எனவும் ஆனால் பொரிஸ் ஜோன்சனே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் எனவும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா வந்தடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டணியான நேட்டோவின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி நேற்றையதினம் பிரித்தானியா வந்தடைந்துள்ளார்.
நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க்குடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் பிரெக்ஸிற்றை ஆதரிப்பதாகவும் பிரெக்ஸிற் நிகழுமென அவர் கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரித்தானியப் பொதுத்தேர்தலில் அவரது தலையீடு குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப்;
நான் இதைச் சிக்கலாக்க விரும்பவில்லை, நிறைய பேருக்கு நான் நிறையத் தேர்தல்களை வென்று கொடுத்துள்ளேன். ஆனால் நான் பிரித்தானியத் தேர்தலிலிருந்து விலகியிருப்பேன். நான் பிரெக்ஸிற்றை ஆதரிக்கிறேன். நான் தேர்தலில் தலையிடப் போவதில்லை ஆனால் பொரிஸ் ஜோன்சனே பிரதமர் பதவிக்குச் சிறந்தவர் என தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற்றுக்கு பின்னரான அமெரிக்க-பிரித்தானிய எதிர்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்;
இல்லை இல்லை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேர்மையாகச் சொல்கிறேன், தேசிய சுகாதார சேவை பற்றி நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. எங்களுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, நாங்கள் அதை விரும்ப மாட்டோம். நீங்களே அதை எங்களிடம் ஒப்படைத்தால் கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
பிரித்தானியப் பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்திப்பீர்களா? எனும் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ஆமாம், நான் அவரைச் சந்திப்பேன், இதுவரை எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் அவரைச் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று ஜெரமி கோர்பின் பிரதமரானால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், அவரால் எவருடனும் பணியாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.