அரேபியாவின் அப்கைக் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீதான துணிச்சலான தாக்குதல்கள் சில கனேடிய ராணுவத் திட்டமிடுபவர்களின் மனத்திடத்தை தளர்த்தியது.
ஈராக் அல்லது ஈரானியப் பிராந்தியங்களிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சேதங்கள், வேகமாக வளர்ந்து வரும் நவீன போர்க்களத்தில் கனேடிய ராணுவம் எதிர்கொள்ளும் பாதிப்புக்கு கிட்டத்தட்ட சரியான எடுத்துக்காட்டாகும்.
கனேடிய ராணுவம் அதன் தரையை மையமாக கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து விடுபட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன.
அதேவேளை, அனைத்து அறிகுறிகளிலும், தேசியப் பாதுகாப்புத் துறை மாற்று முறையைப் பெறுவதற்கு இன்னும் எட்டு ஆண்டுகள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லிபரல் அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கை புதிய விமான எதிர்ப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக கனடா ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் வைனி டி எய்ரி (Lt.-Gen. Wayne D. Eyre) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்ப திட்டம் பாதுகாப்பு அதிகாரிகளின் பகுப்பாய்வு கட்ட பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், விமான எதிர்ப்புப் பாதுகாப்பை மீட்டெடுப்பது அவரது முன்னுரிமைகளில் ஒன்றாகும் என கனடாவின் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.