பிரச்சினையை பா.ஜ.க அரசால் இன்னும் யூகிக்கக் கூட முடியவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. எனும் வரி பயங்கரவாதம் ஆகிய மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்களின் பின் விடுதலையாகியுள்ள அவர், இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,பொருளாதார விவகாரங்களில் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க தவறு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பேசுவதே இல்லை என குற்றஞ்சாட்டிய அவர், நல்ல நாள் வரும் என்ற பா.ஜ.கவின் முடிவு இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார நிபுணர்கள் கூறியது போல், நமது அரசாங்கம் பொருளாதாரத்தை திறமையற்ற முறையில் வழிநடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி கைது செய்யப்படும் அரசியல் தலைவர்கள் குறித்து தான் மிகவும் கவலைப்படுகிறேன் என்றும் நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்காக போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.