புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ‘தர்பார்’ படத்தில் உள்ள அசத்தலான அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த பாடல்கள் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இரசிகர்கள் ‘தர்பார்’ பாடல்களை தமது தொலைபேசிகளில் ‘ரிங்டோன்’ ஆக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார் . ரஜினிகாந்தின் 167ஆவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ‘ஆதித்யா அருணாசலம்’ என்ற கதாபாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பொலிவூட் நடிகர் சுனில் செட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.