பகுதியில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அப்பிள்வுட் டிரைவ் எஸ்.இ. மற்றும் 68 வீதி எஸ்.இ. பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்த ஒரு வாகனத்தின் சாரதி, உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு வாகனத்தின் சாரதி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவ நிலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.