துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் காலத்தில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே தமது நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற காலாண்டு பயிற்சி திட்டங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் 2020 – 2025 ஆம் ஆண்டுக்குள் குறித்த இலக்கை எட்டுவதே தமது நோக்கமாகும் எனவும் இதற்காக சுற்றலா அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.