ஒன்றாரியோ மாநிலங்களில் சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை சைபர் தாக்குதலின் மூலம் பறிகொடுத்ததை அடுத்து லைஃப் லாப்ஸ் ஆய்வுகூடம் பாரியளவில் மீட்புத் தொகையை செலுத்தியுள்ளது.
கனடாவின் பாரிய வலையமைப்பைக் கொண்ட ஆய்வுகூட பரிசோதனை நிலையம், தனிப்பட்ட தரவு பகிரங்கமாக அம்பலப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அதன் கணினி அமைப்புகளில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு பின்னர், மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை மீட்டெடுக்க சைபர் குற்றவாளிகளுக்குப் பணம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், லைஃப் லாப்ஸ் தலைவர் சார்ள்ஸ் பிரவுன் குறிப்பிடுகையில், சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களை குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ராறியோ மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் தகவல்கள் அணுகப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
சைபர் தாக்குதல்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளுடனான பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த நிபுணர்களுடன் இணைந்து மேற்கொண்டதை அடுத்து மீட்கும் தொகையைச் செலுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.