சுவீடன் மன்னா் காா்ல் கஸ்தாஃப், புதுடெல்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஐந்து நாட்கள், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவீடன் மன்னா் மற்றும் அரசி சில்வியாவுக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் நேற்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவா்கள் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அரசியல், வா்த்தகம், அறிவியல், கல்வி என அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய ஸ்வீடன் மன்னரும், அரசியும் பின்னா் ஜாமியா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களையும் பாா்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.